எரியாத விளக்கு
ஊட்டி: ஊட்டி படகு இல்ல சாலையில் பெரும்பாலான தெரு விளக்குகள் எரியாத காரணத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டி படகு இல்ல சாலையில் நாள்தோறும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், பொது மக்களும் நடமாடி வருகின்றனர். இந்நிலையில், சாலையில் பல தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால், இரவில் மக்கள் நடக்க சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.