உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  முழுமை பெறாத தடுப்பு சுவர் வாகனங்கள் நிறுத்த சிக்கல்

 முழுமை பெறாத தடுப்பு சுவர் வாகனங்கள் நிறுத்த சிக்கல்

கோத்தகிரி: கோத்தகிரி நகராட்சி அலுவலகம் முன்பு தடுப்பு சுவர் முழுமை பெறாமல் உள்ளதால், வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, முக்கிய சாலைகளில் வாகனங்களின் இயக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நகரில் போதிய 'பார்க்கிங்' வசதி இல்லாததால், வாகனங்களை நிறுத்துவது, சவாலாக உள்ளது. நகரில், நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்கள் வீணாக உள்ளன. இவற்றை கண்டறிந்து, சமன் செய்து பணிகள் மேற்கொள்ளும் பட்சத்தில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த இட வசதி ஏற்படும். குறிப்பாக. நகராட்சிக்கு உட்பட்ட, சாலை ஓரத்தில், தடுப்பு சுவர் பணி முழுமை பெறாமல் உள்ளது. எதிர் புறத்தில், போலீசார் பேரிகார்டு அமைத்து, கயிறு கட்டி வாகனங்கள் நிறுத்த தடை ஏற்படுத்தி உள்ளதால், வாகனங்கள் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியை சமன் செய்து, தடுப்பு சுவர் அமைக்கும் பட்சத்தில், பல வாகனங்கள் நிறுத்த ஏதுவாக அமையும். இதனால், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை