உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு கூடலுாரில் கடும் போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு கூடலுாரில் கடும் போக்குவரத்து நெரிசல்

கூடலுார்:நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தால், கூடலுாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை, காலாண்டு விடுமுறை காரணமாக, நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடக சுற்றுலா பயணிகள், கூடலூர் வழியாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு அதிக அளவில் செல்கின்றனர். இதன் காரணமாக, கூடலுார் நகரில், ஊட்டி -மைசூரு தேசிய நெடுஞ்சாலை, கோழிக்கோடு சாலையில் காலை முதல் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள், சாலையில் நீண்ட நேரம் காத்திருந்து பயணத்தை தொடர்கின்றன. உள்ளூர் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். போலீசார் போக்குவரத்து சீரமைக்க பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ