அதிகரிக்கும் தெருநாய்கள்; அச்சத்துடன் நடமாடும் மக்கள்
பந்தலுார், ; பந்தலுார் பஜாரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பந்தலுார், உப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் உலா வருகின்றன. திறந்தவெளியில் கொட்டப்படும் இறைச்சி மற்றும் மீன் கழிவுகளை உட்கொள்ளும் நாய்களுக்கு தோல் நோய் பரவி வருவதுடன், 'ரேபிஸ்' பாதிப்பும் உள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், விலங்கு மீட்பு மையப் பணியாளர்கள், நாய்களை பிடித்து சென்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, திரும்பவும் இதே பகுதியில் கொண்டு வந்து விடுகின்றனர். இத்தயை தெருநாய்கள் பஜார் பகுதியில் காலை நேரங்களில் உலா வருகின்றன. இவைகள் சண்டையிடும் போது, அவசர கதியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்; பணிக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வாகனங்களின் குறுக்கே கூட்டமாக செல்லும் போது, விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே, இப்பகுதியில் அதிகரித்துள்ள தெரு நாய் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.