உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குவாண்டம் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தும் பள்ளி யில் நடந்த கருத்தரங்கில் தகவல்

குவாண்டம் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தும் பள்ளி யில் நடந்த கருத்தரங்கில் தகவல்

கோத்தகிரி:கோத்தகிரி ஹில்போர்ட் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், குவாண்டம் அறிவியலின் நுாற்றாண்டை முன்னிட்டு, அறிவியல கருத்தரங்கு நடந்தது. பள்ளி முதல்வர் சந்தியா தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன், 1925ல் தற்போது அறியப்பட்டுள்ள குவாண்டம் அறிவியல் குறித்து, சில அடிப்படைகளை தமது மூளையிலேயே ஆய்வு செய்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அந்த இயற்பியலை முழுவதுமாக கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் வந்த பல விஞ்ஞானிகள் இந்த நவீன குவாண்டம் அறிவியலை ஆராய்ச்சியில் ஆய்வு செய்து கண்டறிந்தனர். நடப்பாண்டு அந்த அறிவியல் துறையின் நுாறாவது ஆண்டாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குவாண்டம் அறிவியல், இந்த பிரபஞ்சம் முழுவதும் சில அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தான் இயங்குகிறது என கூறப்படுகிறது. அனைத்து உயிரினங்களின் பிறப்பு, இறப்பு, உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் குவாண்டம் அறிவியலின் ஒரு பகுதி என நிர்ணயம் செய்துள்ளது. குவாண்டம் அறிவியல் அடுத்த சில ஆண்டுகளில் அறிவியல் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த போகிறது. உலகில் உள்ள அனைத்து இயக்கங்களும், மனித மூளைக்கு உட்பட்டவை. குவாண்டம் அறிவியலின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், நீலகிரியில் ஒரு அறிவியல் மையத்தை துவக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். அதில், கோளரங்கம், வானியல் மற்றும் பிற அறிவியல் துறைகளின் மாதிரிகளை வைக்க வேண்டும். நீலகிரிக்கு, ஒரு ஆண்டுக்கு 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவதால், அவர்களுக்கு அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிவியல் மையம் அமைய வேண்டும். இது குறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். முதுகலை ஆசிரியை ஷர்மிளா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி