உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  அறிவுசார் சிறப்பு மைய நிகழ்ச்சி

 அறிவுசார் சிறப்பு மைய நிகழ்ச்சி

ஊட்டி: ஊட்டியில் 'ஆஷியா' அறிவுசார் குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி மையத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு ரோட்டரி கிளப் ஊட்டி டவுன் தலைவர் தர்ஷன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் செந்தில்குமார், ராஜேஷ் குமார், யஷ்வந்த், அனுராதா முன்னிலை வகித்தனர். அங்கு பயிலும் மாற்று திறனாளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களுக்காக பணிபுரியும் பெண் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாற்று திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை