உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் நள்ளிரவில் தீவிர வாகன சோதனை

ஊட்டியில் நள்ளிரவில் தீவிர வாகன சோதனை

ஊட்டி : ஊட்டியில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், நள்ளிரவில் தீவிர வாகன சோதனை நடந்தது.ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கி நடந்து வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என, தொடர் விடுமுறையை அடுத்து, இங்குள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. சமீபத்தில், கேரளாவை சேர்ந்த சிலர், சுற்றுலா பயணியர் போர்வையில், ஊட்டிக்கு வந்து ரூரல் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட வந்த போது, போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டனர். வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு பின், சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் துப்பாக்கி, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.இந்த சம்பவத்தை அடுத்து, எஸ்.பி., உத்தரவின் பேரில், எல்லையோர சோதனை சாவடி மற்றும் இரவு ரோந்து பணியை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல் விடியும் வரை, எஸ்.பி., நிஷா தலைமையில் சேரிங்கிராஸ் உட்பட பல்வேறு பகுதியில் போலீசார் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டன. வாகனங்களில் போதை பொருட்கள்; ஆயுதங்கள் குறித்தும் தீவிர சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை