உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தக்காளி விவசாயத்தில் ஆர்வம்; நீர்ப்பாசன வசதி அவசியம்

தக்காளி விவசாயத்தில் ஆர்வம்; நீர்ப்பாசன வசதி அவசியம்

கூடலுார்; மசினகுடியில் தக்காளி விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் விவசாயிகள், நீர்பாசன வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி உள்ளனர்.முதுமலை, மசினகுடி பகுதி சுற்றுலா மற்றும் விவசாயத்தை சார்ந்துள்ளது. இங்கு பூண்டு, உருளைக்கிழங்கு, பாகற்காய், பீன்ஸ், பனி அவரை, புடலங்காய், கத்தரிக்காய், குடமிளகாய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.தக்காளி நல்ல மகசூல் கிடைத்து வருவதால் விவசாயிகள், சீசன் காலங்களில் தக்காளி விவசாயத்தில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். ஆனால், பல பகுதிகளை நீர் பாசன வசதி இல்லாததால் தக்காளி விவசாயம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.விவசாயிகள் கூறுகையில்,'மசினகுடி பகுதியில் மற்ற காய்கறிகள் போன்று தக்காளி நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது. கோடையில் போதுமான, நீர்ப்பாசன வசதி தடையின்றி கிடைத்தால் தக்காளி அதிக அளவில் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. எனவே, தக்காளி உற்பத்தியை அதிகரிக்க, அதற்கு தேவையான நீர்ப்பாசன வசதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ