உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நலவாரியத்தில் உறுப்பினராக சேர வீட்டு பணியாளர்களுக்கு அழைப்பு

நலவாரியத்தில் உறுப்பினராக சேர வீட்டு பணியாளர்களுக்கு அழைப்பு

ஊட்டி; தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லெனின் அறிக்கை: நீலகிரி மாவட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு, 19 வகையான தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள, 18 வயதிற்கு மேற்பட்ட, 60 வயதிற்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வீட்டு பணியாளர் நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர்கள், 5 ஆண்டுக்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்களுக்கு திருமணம், மகப்பேறு, இரண்டு குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, கண் கண்ணாடி மற்றும் நியமனதாரருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை, 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில், மாதம் தோறும் நடக்கும் சிறப்பு முகாம் மற்றும் பிற நாட்களிலும் வந்து பயன் பெற வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ