உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகளை வழி அனுப்பிய தந்தை பைக் விபத்தில் பலியான பரிதாபம்

மகளை வழி அனுப்பிய தந்தை பைக் விபத்தில் பலியான பரிதாபம்

குன்னுார்; குன்னுார்-- ஊட்டி சாலை பாய்ஸ் கம்பெனியில் மகளை பணிக்கு பஸ்சில் அனுப்பி விட்டு, சர்ச் செல்ல பைக்கில் சென்ற தந்தை, லாரியில் சிக்கி பலியானார்.குன்னுார் உபதலை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ்,58, உமா தம்பதியின் மகள் மார்டினா. இவர், மேட்டுப்பாளையம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் நிலையில், நேற்று காலை, மைக்கேல்ராஜ் பைக்கில் அழைத்து வந்து, பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.தொடர்ந்து, வேளாங்கண்ணி சர்ச்சிற்கு செல்ல காலை, 6:15 மணியளவில் சாலையை 'கிராஸ்' செய்துள்ளார். அப்போது, இவரது பைக் லாரி மீதி மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த மைக்கேல் ராஜ் அதே இடத்தில் பலியானார்.தொடர்ந்து, இவரது உடல் குன்னுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. வெலிங்டன் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் சூசை என்பவரை கைது செய்தனர்.

தொடரும் உயிர் பலி

இப்பகுதி சாலையில், கடந்த ஆண்டு ஜூன், 2ல், கோபாலபுரம் அருகே பைக் -கார் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர்; அக்., 10ல் நிறுத்தி வைத்த டிப்பர் மீது மோதிய விபத்தில், பாலாஜி நகரை சேர்ந்த மாணவர் யஷ்வந்த்; கடந்த, ஏப்., 18ல், சேரம்பாடியை சேர்ந்த ஹரிஷ் ஆகியோர் பலியாகினர். தற்போது, 4வது பலி நடந்துள்ளது, எனவே, இப்பகுதி சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !