உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  வெண் கழுத்து நாரைகளை பாதுகாப்பது அவசியம்

 வெண் கழுத்து நாரைகளை பாதுகாப்பது அவசியம்

கூடலுார்: 'முதுமலை மசினகுடி பகுதியில் முகாமிட்டுள்ள வெண்கழுத்து நாரைகளை, அழிவிலிருந்து பாதுகாக்க, ஈர நிலங்களை பாதுகாப்பது அவசியம்' என, பறவைகள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி பகுதியில், வெண்கழுக்கு நாரை அதிகளவில் காணப்படுகின்றன. மசினகுடி மரவகண்டி அணை பகுதியில் முகாமிட்டுள்ள பறவைகளை, சுற்றுலா பயணியர் ரசித்து செல்கின்றனர். இப்பறவைகளை, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம், 'அழிந்து வரும் அரியவகை பறவை' என, அறிவித்துள்ளது. ஈர நிலங்கள், ஆறுகள், அணை பகுதிகளில் காணப்படும் தவளை, பாம்பு, பல்லி, பூச்சிகளை உணவாக்கி கொள்கின்றன. நீலகிரியில் சுருங்கி வரும் விளைநிலங்கள், நீர்நிலைகள், ஈர நிலங்களால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, இப்பறவைகள் அழிந்து வருவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவை ஆய்வாளர்கள் கூறுகையில், 'விவசாயத்துக்கு பயன்படுத்தும் ரசாயன உரங்கள், நீர்நிலைகள் அழிவால், இதை சார்ந்து வாழும் மீன், தவளை, பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. ரசாயனத்தால் பாதிக்கப்பட்ட பூச்சிகளை உட்கொள்ளும் இத்தகைய பறவைகள், மரபணு பாதிப்பு ஏற்பட்டு அழியும் ஆபத்து உள்ளது. இப்பறவையினங்களை அழிவில் இருந்து காக்க, ஈர நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ