மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
27-Dec-2025
காரமடையில் பெண்ணிடம் நகையை பறித்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரவீனா, 34. இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் பிரவீனா அணிந்திருந்த 4.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து பிரவீனா, காரமடை போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், நகையை பறித்து சென்றவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சூர்யா, 21 மற்றும் அரவிந்தன், 20 என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூர்யாவை கடந்த மார்ச் 28ம் தேதி கைது செய்து 4.5 பவுன் தங்க செயினை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். தலைமறைவான அரவிந்தனை நேற்று முன் தினம் குட்டையூர் அருகே போலீசார் கைது செய்தனர்.---
27-Dec-2025