சிறந்த மருந்தியல் கல்லுாரியாக ஜே.எஸ்.எஸ்., தேர்வு
ஊட்டி;நாட்டில் சிறந்த மருந்தியல் கல்லுாரிகளுக்கான தரவரிசையில், ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி, 4ம் இடத்தை பெற்று, தேசிய அளவில் பெருமை பெற்றுள்ளது. சென்னை ராஜ்பவனில் நடந்த விருது அளிப்பு மாநாட்டில், தமிழக கவர்னர் ரவி, கல்லுாரி முதல்வர் முனைவர் தனபாலுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இந்த தேசிய தரவரிசை, கற்பித்தல் ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டம் மற்றும் பட்டம் மேற்படிப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி துணை முதல்வர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர். பார்மசி கல்வித்துறையில் தொடர்ந்து மேம்பட்ட தரத்தை தரும் கல்லுாரி நிர்வாகத்துக்கு, ஊழியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.