அரசு பள்ளிக்கு காமராஜர் விருது
கோத்தகிரி,; கோத்தகிரி அரசு உயர்நிலை பள்ளிக்கு, சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது கிடைத்துள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர் ஷைனி மேத்யூஸ் வழிகாட்டுதலில், பள்ளி கட்டமைப்பு வசதி, 100 சதவீதம் தேர்ச்சி, மாணவர் சேர்க்கை, கல்வி இணை செயல்பாடுகளில் மாணவர்களின் வட்டார, மாவட்ட அளவிலான வெற்றி உள்ளடக்கி, காமராஜர் விருது வழங்கப்பட்டுஉள்ளது.மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, பரிசு வழங்கி பாராட்டினார். அத்துடன், 75 ஆயிரம் ரூபாய் பரிசு தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய சக ஆசிரியர்களுக்கு பெற்றோர்; கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.