உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாவரவியல் பூங்காவில் கொய் மலர் நாற்று வளர்ப்பு

தாவரவியல் பூங்காவில் கொய் மலர் நாற்று வளர்ப்பு

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில், முதல்முறையாக கொய்மலர் நாற்றுகள் வளர்க்கும் பணி நடந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவை இரண்டாவது சீசனுக்காக தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கான, பூங்காவில் கொய் விதை போட்டு, நாற்றுகளை வளர்க்கும் பணி முதன் முறையாக நடந்து வருகிறது. குறிப்பாக, 'செல்லோசியா மற்றும் மேத்தோலியா' நாற்றுக்களின் விதை, தாவரவியல் பூங்கா நர்சரிகளில் போடப்பட்டுள்ளது. தற்போது, விதைகள் துளிர்விட்டுள்ள நிலையில், பூங்கா ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகை பூக்கள், பூத்து குலுங்கும் பட்சத்தில், இரண்டாவது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர, அதிகளவில் ஆர்கிட் மலர்கள் இம்முறை வளர்க்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை