உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிருஷ்ண ஜெயந்தி: உறியடி திருவிழா கோலாகலம்

கிருஷ்ண ஜெயந்தி: உறியடி திருவிழா கோலாகலம்

ஊட்டி; கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஊட்டியில் உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. ஊட்டியில் உள்ள ஹரிஹரன் பஜனை சபா சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 146வது உறியடி திருவிழா ஐந்துலாந்தர் பகுதியில் நடந்தது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து நடந்த உறியடி திருவிழாவை ஹரிஹரன் பஜனை சபா தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். பின் நடந்த உறியடி நிகழ்ச்சியில், ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, முத்து பல்லக்கு ஊர்வலம் ஊட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் துவங்கி காபி ஹவுஸ் சந்திப்பு, லோயர் பஜார், மெயின் பஜார் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்து. விழா ஏற்பாடுகளை ஹரிஹரன் பஜனை சபா செயலாளர் கங்கய்யா மூர்த்தி, பொருளாளர் சண்முகம் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ