உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மே 15க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம்; தொழிலாளர் நல துறை உத்தரவு

மே 15க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம்; தொழிலாளர் நல துறை உத்தரவு

குன்னுார் : நீலகிரியில் வரும் மே, 15ம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் கூறியதாவது :தமிழக உணவு நிறுவனங்கள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகள் படி அனைத்து உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.பெயர் பலகையில், 'தமிழில் முதன்மையாகவும், பின்னர் ஆங்கிலத்திலும், அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழியில்,' என, 5:3:2 என்ற விகிதாச்சாரப்படி அமைக்க வேண்டும். அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் கலெக்டரை தலைவராக, கொண்டு கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சி துறை, வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள் சங்கங்களின் கூட்டமைப்புகள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவினர் அனைத்து இடங்களிலும், தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். மே மாதம், 15ம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை