உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் 28 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை

நீலகிரியில் 28 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை

குன்னுார் நீலகிரி மாவட்டத்தில், இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய, 28 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.குடியரசு தினத்தில், இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல், பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நல துறை சார்பில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் தலைமையில், நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பாக, தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் கூறுகையில்,''நீலகிரியில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என, 55 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ வழங்காத, 28 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி