மேலும் செய்திகள்
அபாய மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
27-Sep-2024
குன்னுார் : குன்னுார் பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த, 30ம் தேதி மலை ரயில் பாதையில் ரன்னிமேடு, ஹில்குரோவ், ஆடர்லி பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.கற்கள், மரங்கள், புதர்களுடன் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. இவற்றை ரயில்வே பொதுப்பணி ஊழியர்கள், 3 பிரிவுகளாக பிரிந்து அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில், ரன்னிமேடு பகுதிகளில் மரங்கள், புதர்களுடன் சரிந்ததால் முழுமையாக அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. நேற்றும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. நேற்று தனி சரக்கு ரயிலில் குப்பட்டா கொண்டு வரப்பட்டு மண்சரிவுகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் விழுந்த, பாறை மற்றும் மண்களை அகற்றும் பணியில் ரயில்வே பொதுப்பணி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
27-Sep-2024