உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்ட துவக்க விழா

மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்ட துவக்க விழா

கோத்தகிரி; கோத்தகிரி, 'ஐலேண்ட் டிரஸ்ட்' சார்பில், மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்டம் துவக்க விழா நடந்தது.விழாவுக்கு, தனியார் நிறுவனத்தின் முதுநிலை ஆலோசகர் சத்திய நாராயணன் தலைமை வகித்தார். வாசுதேவன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு, ஐலேண்ட் டிரஸ்ட் மேலாண்மை அறங்காவலர் அல்போன்ஸ் ராஜ் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில்,'மாற்று த்திறன் ஒரு குறை என்று எடுத்து கொள்ளாமல் முயற்சி செய்தால், அனைவரும் வெற்றி பெறலாம்,' என, ஊக்கம் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, சுய முன்னேற்றம் குறித்து மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக பெண்கள் கூட்டமைப்பு அமைப்பின் நிர்வாகி சாராள் வரவேற்றார். மண்டல மேற்பார்வையாளர் பாத்திமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை