உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி; ஐகோர்ட் மதுரை கிளை வக்கீல் வாஞ்சிநாதன் செயல்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு, வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பால நந்தகுமார் முன்னிலை வகித்தார். வக்கீல்கள் கூறுகையில்,'உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய புகார் மனு, சமூக வலைதளத்தில் வெளியானால், அதற்கு புகார் கொடுத்த நபர் எப்படி பொறுப்பாக முடியும். எனவே, நீதிமன்ற வழக்கை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்,'என்றனர். செயலாளர் ஜெயந்தி, மூத்த வக்கீல்கள் சந்திர போஸ், விஜயன், மகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை