அரசு மேல்நிலை பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். 'சட்டம் மற்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும் வழிமுறைகள்; குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் பாதுகாப்புகளுக்கு சட்டங்களை பயன்படுத்திக் கொள்ளும் முறைகள் குறித்து, நீதிபதி பிரபாகரன் விளக்கம் அளித்து பேசினார்.மேலும், மாணவர்கள் படிப்பதன் அவசியம் மற்றும், தேவையற்ற வழிகளில் தங்கள் கவனத்தை திருப்பினால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், வக்கீல்கள் ஜான்சன், கணேசன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நீதிமன்ற பணியாளர் ஷாலினி நன்றி கூறினார்.