உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட சிறுத்தை

கூடலுார் அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட சிறுத்தை

கூடலுார், ;கூடலுார் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுாரில் வனப்பகுதியை ஒட்டிய அரசு, தனியார் தேயிலை தோட்டங்கள், சிறு விவசாயிகளின் தோட்டங்களில், குரைக்கும் மான், முயல், சருகுமான் உள்ளிட்ட சிறிய வனவிலங்குகள் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மேல் கூடலுார் கோக்கால் பகுதியில் உள்ள, தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை முகாமிட்டது. அதனை பார்த்து மக்கள் அச்சமடைந்தனர்.மக்கள் கூறுகையில், 'பகல் நேரங்களில் தேயிலை தோட்டத்தில் முகாமிடும் சிறுத்தை, இரவில் குடியிருப்புகளுக்குள் நுழைந்து வளர்ப்பு நாய் கோழிகளை வேட்டையாடுவதுடன், மனிதர்களை தாக்கும் ஆபத்தும் உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி