மேலும் செய்திகள்
முதுமலை காப்பகத்தில் பெண் புலி உயிரிழப்பு
04-Mar-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே 'பாரிஆக்ரோ' தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனச்சரகர் சஞ்சீவிக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உயிரிழந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். இதன் உடல் பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. உயிரிழந்தது, 8 மாத வயதுடைய பெண் சிறுத்தை குட்டி என்பது தெரியவந்தது. இந்த பகுதியில் கடந்த வாரம் இதே தேயிலை தோட்டத்தில் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழந்து கிடந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
04-Mar-2025