கிராமத்தில் சிறுத்தை ஐந்து ஆடுகள் பலி
குன்னுார்: குன்னுார் காமராஜபுரம் பகுதியில், 5 ஆடுகளை சிறுத்தை தாக்கி கொண்டு சென்றது. குன்னூர் பேரட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை, 5 ஆடுகளை கொன்றது. இந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதுடன் இரவு நேரத்தில் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டபெட்டு வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மக்கள் கூறுகையில்,'சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்,' என்றனர்.