உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கெத்தை காப்பு காடு சாலையில் சிறுத்தை: சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

கெத்தை காப்பு காடு சாலையில் சிறுத்தை: சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

ஊட்டி: ஊட்டி கெத்தை அருகே சாலையோரத்தில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் சென்றுவர வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.ஊட்டி அருகே, கெத்தை, முள்ளி பகுதிகள், மாநில எல்லையாக அமைந்துள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அமைந்துள்ள இப்பகுதியில், யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், கெத்தை முள்ளி பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க, வனப்பகுதியை ஒட்டிய சாலையை, அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி சாலை ஓரத்தில் சிறுத்தை உலா வருகிறது. அதனை, அவ்வழியாக சென்றவர்கள் 'போட்டோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டிய இச்சாலை வழியாக, சுற்றுலா பயணிகள் சென்றுவருவது அதிகரித்துள்ளது.இப்பகுதியில், சிறுத்தை மற்றும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், கூடுமானவரை சுற்றுலா பயணிகள் இச்சாலையில் சென்று வருவதை தவிர்க்க வேண்டும்.வன விலங்குகள் தென்படும் பட்சத்தில், அருகில் சென்று, புகைப்படம் மற்றும் 'செல்பி ' எடுப்பதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !