உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்புக்கு மீண்டும் வந்த சிறுத்தை

 வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்புக்கு மீண்டும் வந்த சிறுத்தை

குன்னுார்: குன்னுார் அருகே. குடியிருப்புக்கு மீண்டும் 'விசிட்' செய்த சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் பழைய அருவங்காடு சாலை, முனீஸ்வரர் கோவில் அருகே, வெடிமருந்து தொழிற்சாலை 'எம்டைப்' குடியிருப்புக்கு சிறுத்தை வந்தது. நாயை வேட்டையாட முயன்றும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது. இது தொடர்பாக வெடி மருந்து தொழிற்சாலை நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பணிக்கு சென்று திரும்புபவர்கள் அச்சத்துடன் உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி