மேலும் செய்திகள்
தேயிலை தோட்டங்களில் காட்டெருமை கூட்டம்
21-Jun-2025
கோத்தகிரி; 'கோத்தகிரி கேர்க்கம்பை கிராம குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வருவதால், அச்சம் அடைந்துள்ள மக்கள் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக, சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனத்தில் இருந்து வெளியே வரும் சிறுத்தை, தேயிலை தோட்டம் மற்றும் புதர் மறைவில் பதுங்கி, அவ்வப்போது வெளியே வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பிரதான சாலையை கடந்து, குடியிருப்புக்குள் புகுந்தது.இதனால், அச்சம் அடைந்த குடியிருப்பு வாசிகள் சப்தம் போட்டதை அடுத்து, சிறுத்தை சாலையை கடந்து தேயிலை தோட்டத்திற்கு சென்று மறைந்தது. இது, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த,'சி.சி.டி.வி.,' கேமராவில் பதிவாகி உள்ளது.மக்கள் கூறுகையில், 'பல நாட்களாக ஒரே இடத்தில் நடமாடி வரும் சிறுத்தையை, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.
21-Jun-2025