உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாய்களை வேட்டையாட நகர் வலம் வரும் சிறுத்தை

நாய்களை வேட்டையாட நகர் வலம் வரும் சிறுத்தை

குன்னுார்; குன்னுார் எடப்பள்ளி பந்துமை இந்திரா நகர் பகுதியில், இரவில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் உணவை தேடி, சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. அதில், எடப்பள்ளி பந்துமை இந்திரா நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை இரவு நேரங்களில் நாய்களை வேட்டையாட வந்து செல்கிறது. இதனால், இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இப்பகுதியை சேர்ந்த இளையராஜா கூறுகையில்,''இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நாய்களை வேட்டையாட சிறுத்தைகள் வந்து செல்கின்றன. கடந்த, 4 நாட்களில் 3 நாய்களை வேட்டையாடி சென்றது. சமீபத்தில் இரவு, 7:00 மணியளவில், வீட்டின் அருகே கடந்து சென்றது கேமராவில் பதிவாகி உள்ளது. வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி