உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரவேனு சாலையில் சிறுத்தை; இரவில் கவனமாக செல்ல அறிவுரை

அரவேனு சாலையில் சிறுத்தை; இரவில் கவனமாக செல்ல அறிவுரை

கோத்தகிரி; கோத்தகிரி அளக்கரை சாலையில், சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி அளக்கரை சாலையில், அரவேனு, புதுார் மற்றும் பெப்பேன் உட்பட, 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. சாலையின் இருப்புறகளிலும், குடியிருப்புகளுடன், தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படுகிறது.வனப்பகுதியில் இருந்து, தண்ணீர் மற்றும் உணவுக்காக, வெளியே வரும் சிறுத்தைகள், தேயிலை தோட்டங்களில் பதுங்கி அவ்வப்போது, குடியிருப்பு மற்றும் சாலையில் உலா வருவது தொடர்கிறது.இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அச்சத்திற்கு இடையே, தோட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை சாலை ஓரிடத்தில் புதர் மறைவில் இருந்த சிறுத்தை துரத்தி உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில், எதிரே வந்த கனரக வாகனத்தின் வெளிச்சத்தை பார்த்து, சிறுத்தை அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை