உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  அடிக்கடி வந்து செல்லும் சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

 அடிக்கடி வந்து செல்லும் சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

குன்னுார்: குன்னுார் டென்ட் ஹில் பகுதியில் அடிக்கடி சிறுத்தை வந்து செல்வதால் கூண்டு வைத்து பிடிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். குன்னுார் டென்ட் ஹில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உள்ளது. இரவு நேரங்களில் வரும் சிறுத்தை நாய்களை வேட்டையாடி செல்கிறது. இந்நிலையில், கடந்த, 27ம் தேதி இரவு, 7:30 மணிக்கே மீண்டும் சிறுத்தை வந்தது தொடர்பாக தமிழக முதல்வருக்கு இப்பகுதி மக்கள் மனு அனுப்பினர். ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இரவு நேரங்களில் இவ்வழியாக வரும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை