உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நுாலக வார துவக்க விழா: வாசகர்கள் பங்கேற்பு

நுாலக வார துவக்க விழா: வாசகர்கள் பங்கேற்பு

கோத்தகிரி: கோத்தகிரியில் நுாலகத்தில், பொது நூலகத்துறை சார்பில் நுாலக வார விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. வாசகர் வட்டத் தலைவர் கோபால் தலைமை வகித்து பேசுகையில்,‘‘போட்டிகள் நிறைந்த இந்த நூற்றாண்டில் மாணவர்கள், தங்களது அறிவித்திறனை நூலகங்கள் வாயிலாக வளர்த்து கொண்டு, சிறந்த குடிமக்களாக வளர வேண்டும்,’’என்றார். நுாலகர் அமுதா முன்னிலை வகித்து பேசுகையில், ‘‘கோத்தகிரி நூலகம், கடந்த ஆண்டு மாநிலத்தில் சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருது பெற்றுள்ளது. தற்போது, இந்த நூலகம், 578 புரவலர்களுடன், மாநிலத்தில் சிறந்த நூலகமாக விளங்குகிறது,’’ என்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ‘‘சமுதாய மாற்றத்திற்கான விதைகள், நூலகத்தில் தான் விதைக்கப்படுகிறது. பள்ளி பருவத்தில் இருந்து, மாணவர்கள் நூலகத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவியல் உட்பட, ஆக்கப்பூர்வமான பல்வேறு துறை நூல்கள் இங்கு குவிக்கப்பட்டுள்ளது,’’ என்றார். மாணவர்களுக்கு. கட்டுரை, பேச்சு, கலை இலக்கியம், வினாடி - வினா, ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில அரசின் 'தமிழ் செம்மல்' விருது பெற்ற முனைவர் லிங்கன், வாசகர் வட்ட நிர்வாகி ஆசிரியர் ராஜ்குமார், இன்னர் வீல் சங்க தலைவர் அனிதா, வக்கீல் முருகன் உட்பட, பலர் பங்கேற்றனர். நுாலக அலுவலக உதவியாளர் கண்ணப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !