உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

கூடலுார்; கூடலுார் எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எல்.ஐ.சி., முகவர்கள் சங்க கிளை தலைவர் ஜெயகுமார் தலைமை வகித்தார். முகவர் மோகன் முன்னிலை வகித்தார். அதில், 'எல்.ஐ.சி., முகவர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி செய்து தர வேண்டும்; 70 வயதுக்கு மேற்பட்ட முகர்வருக்கு குழு காப்பீடு பலன்கள் வழங்க வேண்டும்; காப்பீடு மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்; பழைய முறையில் கமிஷன் வழங்க வேண்டும். மீண்டும், ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வர வேண்டும். முகவர்களுக்கு சேமநல நிதியை உருவாக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. கிளை செயலாளர் முசாபர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி