உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வரும் 5ல் மிலாடி நபி ; மது கடைகள் மூடல்

வரும் 5ல் மிலாடி நபி ; மது கடைகள் மூடல்

ஊட்டி; மிலாடி நபி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது . முகமது நபியின் பிறந்த நாளை 'மிலாடி நபி' என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று புனித நுாலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கொண்டுள்ளனர். மேலும், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவர். இந்நிலையில், மிலாடி நபி பண்டிகை வரும், 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மாவட்டத்தில் செயல்படும், 'எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ' ஆகியவற்றில் மதுபான விற்பனை கடைகள் மூடப்படும். உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட மது விற்பனை உரிமதாரர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அன்றைய தினம், டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள் மற்றும் ஓட்டல் பார்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் அறிந்தால், அது குறித்த விவரத்தை தெரிவிக்கலாம். அதன்படி, 'கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், ஊட்டி (0423-2223802); உதவி ஆணையர் (ஆயம்) (0423-2443693); டாஸ்மாக் மாவட்ட மேலாளர், எடப்பள்ளி, குன்னூர் (0423-2234211),' ஆகியோரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !