உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: தோட்ட தொழிலாளியின் மகனுக்கு இடம்

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: தோட்ட தொழிலாளியின் மகனுக்கு இடம்

பந்தலுார் : நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே அத்திக்குன்னா தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற, வீரமுத்து -ராமாயி தம்பதியின் மகன் அசோக்குமார்,43. அத்திக்குன்னா மற்றும் பந்தலுார் அரசு பள்ளிகளில் படிப்பை முடித்த இவர், கோவை, திருச்சி, சேலம் ஆகிய கல்லுாரிகளில் படிப்பை நிறைவு செய்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து, அவருக்கு 'இந்தோ--ஆஸ்திரேலியா பெல்லோஷிப்' வழங்கப்பட்டது.தற்போது, சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில், கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தின் பேராசிரியராகவும்; தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.நம் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல்' விஞ்ஞானியாகவும் பணியாற்றி உள்ளார். தற்போது, திரவம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் படைப்புகளுக்கான மாற்று குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.இவரின் ஆராய்ச்சி பணியை பாராட்டி, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், அமெரிக்காவின் 'ஸ்டான்போர்ட்' பல்கலைக்கழகம் வெளியிட்ட, உலகின் சிறந்த விஞ்ஞானி பட்டியலில் இடம்பெற்று விருது பெற்றார்.தற்போது, 2023- 24ம் ஆண்டிற்கான, உலகின் சிறந்த விஞ்ஞானி பட்டியல், 2-வது முறையாக இடம்பெற்று விருது பெற்றுள்ளார். இவருக்கு பந்தலுார் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். முனைவர் அசோக்குமார் கூறுகையில்,'' இந்த விருது இரண்டாம் முறை கிடைத்தது, நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. விடா முயற்சி இருந்தால் ஏழ்மை தடையாக இருக்காது. மாணவர்கள் கல்வி ஒன்றை மட்டுமே நம்பினால் வெற்றி நிச்சயம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundaran manogaran
செப் 23, 2024 13:19

நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த விஞ்ஞானிக்கு நீலகிரி மக்களின் சார்பில் வாழ்த்துகள்


A Viswanathan
செப் 23, 2024 10:32

வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை