பந்தலுாரில் தொடரும் கால்நடைகள் பிரச்னை
பந்தலுார்: பந்தலுார் பஜார் பகுதி தாலுகா தலைநகராக உள்ளதால், நாள்தோறும் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.இந்த பகுதியில் உலா வரும் கால்நடைகளால், வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குவதுடன், பாதசாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை பிடித்து அதனை வளர்ப்போருக்கு அபராதம் விதித்து வருகிறது. எனினும், தங்கள் கால்நடைகளை சாலைகளில் மேய விடுவதை தொடர்ந்து வருகின்றனர். எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்.