லாரி கவிழ்ந்து விபத்து
ஊட்டி: தஞ்சாவூர் மாவட்டத் தில் இருந்து ஊட்டி ஆவின் நிர்வாகத்திற்கு வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. ஊட்டி தொட்டபெட்டா அருகில் வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். தொடர்ந்து, பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டு மீண்டும் ஆவினுக்கு வைக்கோல் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தேனாடு கம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.