உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலைப்பாதையில் மக்னா கொம்பன் யானைகள் உலா

மலைப்பாதையில் மக்னா கொம்பன் யானைகள் உலா

குன்னுார்; குன்னுார் மலைப்பாதை ஓரங்களில், மக்னா யானை மற்றும் கொம்பன் யானை தனித்தனியாக உலா வருகின்றன.குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் எட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், நேற்று காலை கே.என்.ஆர்., அருகே கொம்பன் யானை சாலையை கடந்து சென்றது. வாகனங்களை நிறுத்தி வழி கொடுத்த பயணிகள் பலரும் 'வீடியோ' போட்டோ எடுத்தனர். தொடர்ந்து, அருகில் உள்ள வனப்பகுதியில் இந்த யானை முகாமிட்டுள்ளது.வடுகதோட்டம், மரப்பாலம், குரும்பாடி பகுதியில் மக்னா யானை உலா வருகிறது. அவ்வப்போது ரயில் பாதையை கடந்து செல்கிறது. வனத்துறையினர் கூறுகையில், 'இதே இடத்தில் பிறந்து வளர்ந்த மக்னா யானை யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அதேபோல, சாலையில் முகாமிட்டுள்ள கொம்பன் யானை சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி வழி கொடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை