உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகாவிஷ்ணு கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

மகாவிஷ்ணு கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

கூடலுார்; கூடலுார் அருகே, 500 ஆண்டுகள் பழமையான புத்துார் வயல் மகாவிஷ்ணு கோவில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது.கூடலுார் புத்துார்வயல் அருகே உள்ள, 500 ஆண்டுகள் பழமையான மகாவிஷ்ணு கோவில், புனரமைப்பு பணிகள் முடிந்து, 9ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான விழா, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், உச்ச பூஜை நடந்தது. மாலை மஹாதீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று காலை கணபதி ஹோமத்துடன், கலச அபிஷேகம் நடக்கிறது. நாளை முதல், 8ம் தேதி வரை தினமும் காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மாலை மஹா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9ம் தேதி அதிகாலை, 3:55 மணிக்கு, கணபதி ஹோமம், மஹா பிம்ப பிரதிஷ்டை, தாணம் சுப பிரதிஷ்டை தொடர்ந்து கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடக்கும். காலை, 11:30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும், மாலை மஹா தீபாராதனை திருவிளக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது.தொடர்ந்து, 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை காலை கணபதி ஹோமமும் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ