பராமரிப்பு இல்லாத பேரூராட்சி மண்டபம்
கோத்தகிரி; கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான, மண்டபம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகத்திற்கு கீழ்ப்பகுதியில், மாதா கோவில் சாலையை ஒட்டி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விசாலமாக மண்டபம் கட்டப்பட்டது.இங்கு, ஓய்வு பெறும் அலுவலர்களின் பிரிவுபசார நிகழ்ச்சியுடன், பேரிடர் நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். தற்போது இந்த மண்டபம் போதிய பராமரிப்பு இல்லாமலும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், மரங்களுடன், புதர் செடிகள் அகற்றப்படாமல் மண்டபத்தை மூடியவாறு காட்சியளிக்கிறது. இதனால், நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் இந்த கட்டடத்தை சீரமைத்து பயன்படுத்த வேண்டும்.