மேலும் செய்திகள்
தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
13-Dec-2024
ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா புல்தரை மைதானம், பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடக்கிறது. இதனை ஒட்டி மலர்களை தயார்படுத்த விதைகள் சேகரிக்கப்பட்டு தொட்டிகளில் நடவு செய்யும் பணி ஒருபுறம் நடந்து வருகிறது. பிற பகுதிகளிலும் பராமரிப்பு பணி நடக்கிறது. இங்குள்ள புல் தரையில் சுற்றுலா பயணியர் குடும்பத்துடன் ஆடி, பாடி மகிழ்வது வழக்கம். தற்போது, உறைப்பனி பொழிவு அவ்வப்போது தென்படுவதால் புல் தரை மைதானம் பாதிக்காமல் இருக்க காலை நேரங்களில் 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணியை ஒட்டி, புல் தரை மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பனி காலத்திலும், பசுமையாக காணப்படும் புல் தரை மைதானத்தின் எதிரே நின்று சுற்றுலா பயணியர் 'செல்பி' எடுத்து செல்கின்றனர்.
13-Dec-2024