மலபார் தேவசம் போர்டு ஆணையர் பதவியேற்பு
பாலக்காடு: கேரள மாநிலம், மலபார் தேவசம் போர்டு ஆணையராக பிஜு பொறுப்பேற்றார்.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், இரிஞ்சாலகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிஜு. எம்.எஸ்சி., பட்டம் பெற்றுள்ளார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., பி.எட்., ஆகிய பட்டமும் பெற்ற பின், கொச்சி பல்கலைக்கழகத்தில் இருந்து எல்.எல்.பி., படித்த இவர், 2000ல் அரசு வேலையில் சேர்ந்தார்.பிரசித்தி பெற்ற காடாம்புழை பகவதி அம்மன், மம்மியூர் மகாதேவர், ஞாங்காட்டிரி பகவதி அம்மன் கோவில்களில், நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய இவர், நான்காண்டுகளாக தேவசம் போர்டின், துணை ஆணையராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக மலபார் தேவசம் போர்டு தணிக்கை ஆய்வாளராக இருந்தார். தற்போது, மலபார் தேவசம் போர்டு ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.