மலையேற்றத்தின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
பாலக்காடு: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரங்காடி, பகுதியை சேர்ந்தவர் சனேஷ் 45. இவர் தனது நண்பர்களுடன் மலையேற்றத்திற்காக வந்திருந்தார். மலையேறி உச்சியை அடைந்த தருணத்தில், சனேஷுக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மலையுச்சியில் முகாமிட்டிருந்த சுகாதாரப் பணியாளர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். வாகனத்தில், கொப்பம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.