உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

கோத்தகிரி; கோத்தகிரி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், 25வது நாள் மண்டல பூஜை சிறப்பாக நடந்தது.கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கடந்த, 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது. கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள பல்வேறு சமுதாய மக்கள் மற்றும் தனியார் உபயதாரர்கள் சார்பில் நாள்தோறும் நடந்து வரும் மண்டல பூஜையில், அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 25வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. அதிகாலை முதல், அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோத்தகிரி வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி