உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மன்மோகன் சிங் மறைவு; ஊட்டியில் காங்., அஞ்சலி

மன்மோகன் சிங் மறைவு; ஊட்டியில் காங்., அஞ்சலி

ஊட்டி ; முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, ஊட்டியில் காங்., கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் தலைமை வகித்தார். மன்மோகன் சிங் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், நகர தலைமை நித்யசத்யா, மாவட்ட பொது செயலாளர் ரவிக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மானேஷ் சந்திரன், நிர்வாகிகள் ரபீக், பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.*கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் வட்டார தலைவர் சில்லபாபு தலைமையில், மன்மோகன் சிங் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் வட்டார தலைவர் பில்லன், நிர்வாகிகள் கமலா சீராளன், தேவராஜ் மற்றும் மணி உட்பட, பலர் பங்கேற்றனர். இதேபோல, குன்னுார், குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில், காங்., கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை