உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முப்படை வீரர்களுக்கான மாரத்தான் போட்டிகள்

முப்படை வீரர்களுக்கான மாரத்தான் போட்டிகள்

குன்னுார்; குன்னுாரில் நடந்த, 55வது முப்படை வீரர்களுக்கான மராத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில், 'ஆர்மி ரெட்' அணி முதலிடம் பிடித்தது.குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், தங்கராஜ் ஸ்டேடியத்தில், 55வது முப்படை வீரர்களுக்கான மராத்தான் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முப்படைகளில், பல்வேறு சேவைகளை சேர்ந்த, 4 அணிகள் பங்கேற்றன. 10 கி.மீ., துாரம் நடந்த நெடுந்துார ஓட்டத்தில், 'ஆர்மிரெட்' அணி; 'ஆர்மிகிரீன்' அணி, கப்பற்படை, விமான படை அணிகள் முறையே முதல், 4 இடங்களை பிடித்தன. அதில், 24 வீரர்களில், 10 பேர் தேசிய நெடுந்துார ஓட்ட பந்தயத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த குழுவினர் மெட்ராஸ் ரெஜிமென்ட் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ