மாரியம்மன் கோவில் திருவிழா பறவை காவடி ஊர்வலம் பரவசம்
பந்தலுார், ; பந்தலுார் அருகே நெல்லியாளம் டான்டீ மாரியம்மன் கோவில் திருவிழா, 9-ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.தொடர்ந்து கொடியேற்றம், காப்பு கட்டுதல் மற்றும் கரகம் பாலித்தல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 108 தீப அலங்காரம், அன்னபூஜை, அன்னதானம் நடந்தது. மறுநாள் சிறப்பு பூஜைகள், 25க்கும் மேற்பட்ட பறவை காவடி, கத்தி காவடி, சுழல் காவடி ஊர்வலம் கொளப்பள்ளி பஜார் வழியாக, கோவிலுக்கு சென்றது. அங்கு அக்னிகாவடியுடன், தீக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகள், மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மற்றும் விழா கமிட்டியினர், டான்டீ நிர்வாகம், தொழிலாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.