மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேகம்
05-Feb-2025
ஊட்டி; ஊட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.நீலகிரி மாவட்டத்தில் ஒரே கருவறைக்குள் மாரியம்மன்; காளியம்மன் குடிகொண்டுள்ள ஆலயமாக உள்ள, ஊட்டி மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் புனரமைப்பு பணி முடிந்ததை அடுத்து, நாளை (19ம் தேதி) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதனையொட்டி பரிவார சன்னதிகளான வரசித்தி விநாயகர், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், தியாகராஜர், வடிவாம்பிகை, பாலமுருகன், கால பைரவர் சன்னிதிகள் புனரமைக்கப்பட்டன. இதை தவிர அன்னதான மண்டபம் கீழ் தளம் அமைத்து, புது பொலிவுபடுத்தப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நேற்று காலை, 8:45 மணி முதல் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, பேரீதாடனம், புஷ்பாண்ட பூஜை, மகா கணபதி யாகம், மகாலட்சுமி யாகம், நவக்கோள் யாகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை,5:30 மணிக்கு முதற்கால யாக வேள்வி, மூலமந்திர யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நாளை காலை, 7:20 மணி முதல் விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால ஹோமம், நாடி சந்தனம், மகா பூர்ணஹுதி, மகா தீபாராதனை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை, 9:15 மணிக்கு பரிவார கோபுர மகா கும்பாபிஷேகம், 9:20மணிக்கு பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9:30க்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
05-Feb-2025