மேலும் செய்திகள்
வனத்துறைக்கு கண்டனம் மசினகுடியில் ஆர்ப்பாட்டம்
03-Feb-2025
காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்
24-Jan-2025
ஊட்டி:முதுமலை மசினகுடி பகுதி மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கூடலூர் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் தலைமையில், மக்கள் மசினகுடி வன கோட்ட துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மசினகுடி, மக்களின், அடிப்படை வசதிகள் செய்து தர தடை விதிக்க கூடாது. அதற்கான கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்ல தடையின்றி அனுமதிக்க வேண்டும். உள்ளூர் சுற்றுலா வாகனங்கள் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் துணை இயக்குனரை பணியிடம் மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மசினகுடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
03-Feb-2025
24-Jan-2025