மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தல் மக்கள் பிடித்து ஒப்படைப்பு
11-Dec-2024
கூடலுார்; கூடலுாரில் மண் கடத்திய இரண்டு மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.கூடலுாரில் இரவில் அனுமதியின்றி, டிப்பர் லாரிகளில் மண் கடத்துவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது மற்றும் போலீசார் ஊட்டி சாலையில், இரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, மண் ஏற்றி வந்த இரண்டு மினி லாரிகளை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் ஓட்டுனர்கள் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். அந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், 'கூடலுார் கோக்கால் பகுதியில் இருந்து நகராட்சி பணிக்காக அனுமதி இன்றி மண்ணை லாரியில் கடத்தி வந்தனர்,' என தெரியவந்தது. இது தொடர்பாக, பாலகிருஷ்ணன்,47, என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான, லாரி ஓட்டுனர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் என, 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார், நடவடிக்கையால், தனியார் இடங்களில் இரவில் அனுமதியின்றி பொக்லைன் பயன்படுத்தி மண்ணை அகற்றி கடத்திவரும் நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
11-Dec-2024